முட்களின் நடுவே
வாசனை ரோஜாவாய் இருக்க ஆசை
தண்ணீரின் நடுவே
தனியாய் தாமரையாய் இருக்க ஆசை
இருளின் நடுவே
வானில் நிலவாய் இருக்க ஆசை
கஷ்டங்கள் , தனிமைகள் , சோதனைகளில்
இயேசுவே நீர் என்னோடு இருக்க ஆசை !!
-----------------------------------------------------------------
வழி விலகும் நட்சத்திரமாய் அல்ல ,
வழி காட்டும் நட்சத்திரமாய் மாற
அணைந்து போகும் விளக்காய் அல்ல ,
அணையாத ஜோதியாய் திகழ
தேய்கின்ற நிலவாய் அல்ல ,
பௌர்ணமி நிலவாய் பிரகாசிக்க
உலக மனிதனாய் அல்ல ,
தேவ சாயலாய் உருவாக்கப்பட
அன்பர் இயேசு அழைக்கிறார் உன்னை !!
------------------------------------------------------------------
Thursday, August 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
hmm,kavithai ellam nalla irukku
Post a Comment